பிசிசிஐ களின்படி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பந்துவீசி முடிக்காத அணிகளின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்ற போதிலும், அந்த அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு ஐபிஎல் நிர்வாகம் பெரும் அதிர்ச்சி அளித்துள்ளது.
மேலும் ஆட்டத்தின் போது டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட பந்துவீச கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால் ஐபிஎல் நன்னடத்தை விதிகளின் கீழ் அக்சர் படேலுக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த சீசனில் டெல்லி அணி செய்த முதல் தவறு இது என்பதால், கேப்டனுக்கு மட்டும் குறைந்தபட்ச அபராதமாக இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஒரு முக்கியமான வெற்றியைத் தொடர்ந்து இப்படி ஒரு தண்டனை கிடைத்திருப்பது டெல்லி ரசிகர்களிடையே சற்று வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அடுத்தடுத்த போட்டிகளில் இதே தவறு மீண்டும் நடந்தால், அபராதத் தொகை அதிகரிப்பதோடு கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதால், இனிவரும் ஆட்டங்களில் நேர நிர்வாகத்தில் டெல்லி அணி கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
