சமூக வலைதளங்களில் தற்போது பெண் ஒருவரின் வியக்கத்தக்க வீடியோ ஒன்று காட்டுத்தீயாய் பரவி வருகிறது. “இந்த இந்தியப் பெண்ணுக்கு இயற்பியல் (Physics) நன்றாகத் தெரியும்” என்ற கேப்ஷனுடன் எக்ஸ் (X) தளத்தில் பகிரப்பட்டுள்ள அந்த வீடியோவில், ரயிலில் உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் பெண் ஒருவர், வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் ரயிலில் இருந்து மிகவும் லாவகமாக கீழே இறங்குகிறார்.
An Indian woman casually demonstrates what looks like a masterclass in physics.
Balance, timing, and precision, so effortless it almost feels unreal.
Sometimes, real-life skills beat textbook theory. 🔥 pic.twitter.com/V6iH16FMQl— The Nalanda Index (@Nalanda_index) April 11, 2026
வேகமாகச் செல்லும் ரயிலில் இருந்து இறங்கும்போது உடலை எப்படிச் சமநிலைப்படுத்த வேண்டும் என்ற நுணுக்கத்தை அந்தப் பெண் கையாண்ட விதம், பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆபத்தான செயலாக இருந்தாலும், அவரது அந்த அசாத்தியமான ‘பேலன்சிங்’ திறமையைப் பார்த்து நெட்டிசன்கள் வியந்து பாராட்டி வருகின்றனர்.
