தமிழக முதலமைச்சர் விஜய், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது சீமானின் இல்லத்திற்கு வெளியே ஏராளமான நாம் தமிழர் கட்சித் தொண்டர்கள் திரண்டிருந்தனர். அப்போது ஒரு தொண்டர் உற்சாகத்துடன் முதலமைச்சர் விஜய்க்கு கை கொடுக்க முயன்றார். ஆனால், விஜய் அதை கவனிக்க தவறினார்.
தெரிந்து யாரையும் Hurt பன்னிட கூடாது
தங்கமான மனுசன் சேர் 😭❤️ pic.twitter.com/EuMj3iqzZB
— Kavya (@Kavya_tvk) May 11, 2026
இதனால் அந்தத் தொண்டர் மிகுந்த ஏமாற்றமடைந்து முகம் மாறினார். ஆனால், அடுத்த சில நொடிகளிலேயே அதனைச் சட்டென கவனித்த முதலமைச்சர் விஜய், உடனே அந்தத் தொண்டரை நோக்கித் திரும்பி, புன்னகையுடன் கை கொடுத்தார். ஏமாற்றத்தில் இருந்த தொண்டர் இதனால் நெகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் ‘அரசியல் நாகரீகம்’ எனப் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.
