தமிழக சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருக்கும் விஜய்க்கு, மக்கள் மத்தியிலும் சமூக வலைதளங்களிலும் ஆதரவு அலை பெருகி வருகிறது. குறிப்பாக, தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ X (ட்விட்டர்) பக்கம் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் சுமார் 2 மில்லியன் (20 லட்சம்) ஃபாலோவர்ஸைக் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
இதற்கு முன்பு சுமார் 4 லட்சம் பேர் மட்டுமே பின்தொடர்ந்து வந்த நிலையில், தற்போது அது 20 லட்சமாக உயர்ந்துள்ளது. பதவி ஏற்பு விழாவின் புகைப்படங்கள் மற்றும் புதிய அரசின் திட்டங்கள் குறித்த பதிவுகள் அதிகளவில் பகிரப்பட்டு வருவதால், இந்த எண்ணிக்கை இன்னும் மின்னல் வேகத்தில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
