தமிழக முதலமைச்சர் விஜயை, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் சந்தித்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, அரசியல் விவகாரங்களைத் தாண்டி பல நெகிழ்ச்சியான பழைய நினைவுகளை இருவரும் பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக, விஜய் சிறுவனாக இருந்தபோது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை வைகோ நினைவு கூர்ந்தார்.

​”உங்களுக்கு 9 வயதாக இருந்தபோது, உங்கள் புதிய வீட்டிற்கு நானும் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரும் நேரில் வந்தோம்” என வைகோ கூறியதைக் கேட்டு முதலமைச்சர் விஜய் நெகிழ்ச்சியில் ஆழ்ந்தார். பழைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டதோடு, தமிழகத்தின் தற்போதைய வளர்ச்சித் திட்டங்கள் குறித்தும் இருவரும் இந்தச் சந்திப்பில் ஆலோசித்தனர்.