தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்து மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்ட நிலையில், கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாகப் பரபரப்பு எழுந்துள்ளது.
எடப்பாடி பழனிசாமியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக ஏற்கக் கோரி ஓ.எஸ். மணியன் தலைமையில் 17 எம்.எல்.ஏக்கள் மனு அளித்த நிலையில், அதற்குப் போட்டியாக எஸ்.பி. வேலுமணியைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கக் கோரி சி.வி. சண்முகம் தலைமையில் 30 எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
இந்த இருவேறு மனுக்கள் அதிமுகவில் அதிகாரப் போட்டி நிலவுவதை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளன. இருப்பினும், கட்சிக்குள் பிளவு ஏதுமில்லை என்றும், சிறிய பிரச்சனைகள் விரைவில் சரியாகிவிடும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு விளக்கம் அளித்துள்ளது.
இத்தகைய குழப்பமான சூழ்நிலையில், ராயபுரம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் (X) பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.
தனது இல்லத்தில் 60 அடி உயரத்தில் அதிமுக கொடி பறக்கும் காட்சியைப் பதிவிட்டுள்ள அவர், எம்.ஜி.ஆரின் ‘விவசாயி’ படப் பாடலான “பறக்க வேண்டும் எங்கும் ஒரே சின்னக் கொடி” என்ற வரிகளைப் பின்னணியில் சேர்த்துள்ளார்.
எங்கள் இல்லத்தில் அறுபது அடி உயரத்தில் பட்டொளி வீசி பறக்கும் கழக கொடி…. pic.twitter.com/c7k6t4ukOn
— DJayakumar (@djayakumaroffcl) May 11, 2026
“>
கட்சியில் பிளவு குறித்த செய்திகள் பரவி வரும் வேளையில், அதிமுக கொடி என்றும் ஒற்றுமையுடன் பறக்கும் என்பதைக் குறிப்பால் உணர்த்தும் வகையில் அவரது இந்தப் பதிவு அமைந்துள்ளதாகப் பார்க்கப்படுகிறது.
