மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள ஒரு பேருந்து நிலையத்தில், பேருந்து ஊழியர்களின் கவனக்குறைவால் பெண் தூய்மைப் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. பேருந்தின் மேல்பகுதியில் இருந்த பார்சல் பெட்டிகளை ஊழியர்கள் கீழே இறக்கிக் கொண்டிருந்தபோது, கீழே யாராவது இருக்கிறார்களா என்று கவனிக்காமல் ஒரு கனமான பெட்டியைத் தூக்கி வீசியுள்ளனர்.

மேலும் துரதிர்ஷ்டவசமாக, அந்த நேரத்தில் அங்கு துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த பெண்மணியின் மீது அந்தப் பெட்டி பலமாக விழுந்தது. இதில் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார். இந்தக் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. காயமடைந்த அந்தப் பெண் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

“>

இந்நிலையில் பொது இடங்களில் பணிபுரியும் ஊழியர்களின் பாதுகாப்பில் இத்தகைய அலட்சியம் காட்டப்படுவது பொதுமக்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாகப் போலீசார் வழக்குப் பதிவு செய்து, அந்தப் பேருந்து ஊழியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.