உத்தரப்பிரதேச மாநிலம் சஹாரன்பூரில் குடும்பத் தகராறு காரணமாக மைத்துனன் ஒருவன், தனது கர்ப்பிணி அண்ணி என்றும் பாராமல் மண்வெட்டியால் வெட்டிக் கொலை செய்துள்ள கொடூர சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சஹாரன்பூர் மாவட்டம் நாநௌதா காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு குடும்பத்தில், நீண்ட நாட்களாக நிலவி வந்த குடும்பப் பிரச்சினையே இந்தக் கொலைக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
மேலும் சம்பவத்தன்று ஆத்திரமடைந்த அந்த நபர், வீட்டில் இருந்த தனது அண்ணியை மண்வெட்டியால் சரமாரியாகத் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அந்தப் பெண், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
இதனால் கொல்லப்பட்ட பெண் ஆறு மாத கர்ப்பிணியாக இருந்தார் என்பது இந்தச் சம்பவத்தின் சோகத்தை மேலும் அதிகமாக்கியுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் தப்பியோட முயன்ற குற்றவாளியைக் கைது செய்த போலீசார், அவர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரு சிறு குடும்பத் தகராறு, பிறக்காத குழந்தையோடு ஒரு தாயின் உயிரைப் பறித்திருக்கும் இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
