உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால், நாட்டின் அந்நியச் செலாவணியைச் சேமிக்க எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக, மக்கள் மீண்டும் வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையைத் தொடரலாம் என்றும், இதன் மூலம் ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலையும் மிச்சப்படுத்தலாம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
மேலும், ஒரு விசித்திரமான வேண்டுகோளாக, அடுத்த ஓராண்டு காலத்திற்குத் திருமண நிகழ்ச்சிகளுக்காகத் தங்கம் வாங்குவதைத் தவிர்க்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஹார்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, இந்திய எண்ணெய் நிறுவனங்களுக்கு மாதம் ₹30,000 கோடி வரை இழப்பு ஏற்படுவதைத் தடுக்கவே இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
கச்சா எண்ணெய் இறக்குமதியால் ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைக்கப் பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டுமென அவர் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
