உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த வளரிளம் பெண் ஒருவரிடம் ஸ்கூட்டரில் வந்த நபர் அநாகரீகமாக நடந்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டின் ரயில்வே சாலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, காவல்துறையினர் உடனடியாக விசாரணையில் இறங்கினர். அந்த வீடியோவில், ஸ்கூட்டரில் செல்லும் நபர் அந்தப் பெண்ணைத் தரம் தாழ்ந்த முறையில் தொட்டுவிட்டுச் செல்வது அப்பட்டமாகப் பதிவாகியுள்ளது.
A man riding a scooter molested a teenage girl on a road in Uttar Pradesh’s Meerut district and was later arrested after a CCTV video of the incident went viral, police said.
The incident took place in the Railway Road police station area of Meerut. In the viral CCTV footage,… pic.twitter.com/s7498zehaD
— IndiaToday (@IndiaToday) May 9, 2026
“>
மேலும் வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், குற்றவாளியைக் கண்டறிந்து கைது செய்தனர். பிடிபட்ட நபர் பிலால் என அடையாளம் காணப்பட்டுள்ளார். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீரட் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதியில் வசிக்கும் பெண்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், பகல் நேரத்திலேயே துணிச்சலாக இத்தகைய அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் செயல் பொதுமக்களிடையே கடும் கோபத்தை கிளப்பியுள்ளது.
