மத்திய இணை அமைச்சர் எல். முருகன் அவர்கள் நேற்று சென்னையிலிருந்து கோவைக்கு விமானம் மூலம் சென்றார். அப்போது சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் தற்போது நிலவும் அரசியல் மாற்றங்களுக்கும் பாஜாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
நேற்றைய தினமே கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து மிகத் தெளிவாக விளக்கம் அளித்துவிட்டதாக அவர் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக அரசியலில் நடக்கும் விவகாரங்களில் தங்களுக்கு எந்த பங்கும் இல்லை என்றும், எந்த ஒரு நடவடிக்கையையும் தாங்கள் எடுக்கவில்லை என்றும் கூறினார்.
தேவையில்லாமல் இந்தப் பிரச்சனையில் பாஜகவை இழுப்பது சரியல்ல என்றும், இதில் தாங்கள் எவ்விதத்திலும் தலையிடவில்லை என்றும் அவர் உறுதியாகத் தெரிவித்தார். இதன் மூலம் தமிழக அரசியல் சூழல் குறித்து எழும் யூகங்களுக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
