தமிழக அரசியலில் நிமிடத்திற்கு நிமிடம் அதிரடித் திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் வீட்டுக்கு மீண்டும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, ஆட்சி அமைக்கத் தேவையான போதிய பெரும்பான்மை இல்லை எனக்கூறி ஆளுநர் தரப்பில் விஜய் அழைக்கப்படாததால், அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு திடீரென வாபஸ் பெறப்பட்டிருந்தது; இது தவெக தொண்டர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

ஆனால், தற்போது காங்கிரஸ், விசிக மற்றும் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தவெக ஆட்சி அமைக்கத் தங்களது ஆதரவுக் கடிதத்தை வாரி வழங்கியுள்ளதால், விஜய்யின் கை ஓங்கியுள்ளது. இதன் விளைவாக, பெரும்பான்மையை விஜய் எட்டிவிட்டதை உணர்ந்த காவல் துறை, மீண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தின் முன் நூற்றுக்கணக்கான போலீசாரைக் குவித்துள்ளது.

கோட்டையை நோக்கி ‘தளபதி’ நகரத் தொடங்கிவிட்டதைக் குறிக்கும் விதமாக, விஜய் வீட்டு வாசலில் போலீஸ் வாகனங்கள் அணிவகுத்து நிற்பது தமிழக அரசியல் களம் அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகிவிட்டதை அப்பட்டமாக உணர்த்துகிறது.