தமிழக அரசியலில் பல நாட்களாக நீடித்து வந்த இழுபறிக்கு ஒரு அதிரடியான முடிவு கிடைத்துள்ளது. தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க, ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆதரவு தெரிவித்திருந்த நிலையில், தற்போது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (VCK) ஆகியவையும் தங்களது நிபந்தனையற்ற ஆதரவை உறுதி செய்துள்ளன.

தொடக்கத்தில் தயக்கம் காட்டிய ஐயுஎம்எல் தலைவர் காதர் மொய்தீன், தற்போது ஆட்சி அமையத் தேவையான ஆதரவுக் கடிதத்தை வழங்கியுள்ளார். இதன் மூலம் தவெக-வின் பலம் மேஜிக் நம்பரான 118-ஐ எட்டியுள்ளதாகத் தெரிகிறது . “ஆட்சியில் பங்கேற்க மாட்டோம், ஆனால் மதச்சார்பற்ற அரசை ஆதரிப்போம்” என ஆதரவு தந்துள்ள கட்சிகள் அறிவித்துள்ளதால், விஜய் தனது தவெக பட்டாளத்துடன் தனித்து ஆட்சியமைப்பது உறுதியாகியுள்ளது.

பெரும்பான்மை பலம் கிடைத்துவிட்டதால், தற்போது விஜய் ஆளுநர் மாளிகை நோக்கிப் பயணித்துக் கொண்டிருக்கிறார்; நாளை நேரு உள்விளையாட்டு அரங்கில் தமிழகத்தின் புதிய முதலமைச்சராக ‘தளபதி’ அரியணை ஏறுவார் என எதிர்பார்க்கப்படுவதால் தொண்டர்கள் உற்சாகத்தின் உச்சத்தில் உள்ளனர்.