தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான மேஜிக் நம்பரை (118) எட்ட தவெக தலைவர் விஜய் தீவிரமாகப் போராடி வரும் நிலையில், யாரும் எதிர்பாராத ஒரு மின்னல் வேகத் திருப்பமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) தனது ஆதரவுக் கடிதத்தை மின்னஞ்சல் (E-mail) வாயிலாக தவெக தலைமை அலுவலகத்திற்கு அனுப்பி வைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளை அம்பேத்கர் திடலில் அவசரக் கூட்டம் கூடி முடிவெடுக்கப்படும் எனத் திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், அதற்கு முன்பாகவே ஆதரவுக் கடிதம் பறந்திருப்பது அரசியல் வட்டாரத்தையே அதிர வைத்துள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் கட்சியின் 5 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு மற்றும் கம்யூனிஸ்ட்கட்சிகள் ஆதரவு பெற்று விசிக-வின் இந்தத் திடீர் ‘ஈமெயில்’ ஆதரவு திமுக முகாமை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
