தமிழக அரசியல் களம் தற்போது ‘தளபதி’ விஜய்யைச் சுற்றிச் சுழன்று வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு அரசியல் பிரமுகர்கள் சமூக வலைதளத்தில் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் தனது எக்ஸ் தளத்தில், “இந்துக்களுக்கு எதிரான சக்திகளோடு இணைந்திருந்த திமுகவுக்கு மாற்றாகத் தமிழக வெற்றிக் கழகம் வந்துள்ளது” எனப் பதிவிட்டு, விஜய்யின் வருகையைத் தனது பாணியில் வரவேற்றார்.

ஆனால், அவரது தம்பியும் மதுரவாயல் தொகுதியின் தவெக எம்.எல்.ஏ-வுமான ரேவந்த் சரண், தனது அண்ணனின் பதிவை ரீட்வீட் செய்து பதிலடி கொடுத்துள்ளார்.

“களத்தின் பெயர்: தமிழக சட்டசபை, களத்தில் உள்ள உறுப்பினர்கள்: 1” எனப் பதிவிட்டு, பாஜகவைச் சட்டமன்றத்தில் ஓரம் கட்டிவிட்டதாக மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அண்ணன் பாஜகவிலும், தம்பி தவெக-விலும் இருப்பதால், வீட்டுக்குள் இருக்கும் உறவை விட அரசியல் கொள்கையே பெரிது என இருவரும் சமூக வலைதளத்தில் மல்லுக்கட்டுவது நெட்டிசன்களிடையே பேசுபொருளாக மாறியுள்ளது.