தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், விரைவில் முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தலைநகர் சென்னையில் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் விசிக ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் விஜய்க்குத் தேவையான பெரும்பான்மை கிடைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் (Nehru Indoor Stadium) பதவியேற்பு விழாவை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதற்காக அரங்கம் புதுப்பொலிவு பெற்று வருவதோடு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. ஆளுநரிடம் பெரும்பான்மை கடிதத்தைச் சமர்ப்பித்த பிறகு, பதவியேற்புக்கான அதிகாரப்பூர்வ தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசியலில் ஒரு புதிய சகாப்தம் தொடங்கப் போவதைக் காண லட்சக்கணக்கான தவெக தொண்டர்கள் சென்னை நோக்கிப் படையெடுக்கத் தொடங்கியுள்ளதால், நேரு ஸ்டேடியம் பகுதி இப்போதே விழாக்கோலம் பூண்டுள்ளது.
