சுயநலமும் போட்டிகளும் நிறைந்த இன்றைய உலகில், மனிதநேயம் இன்னும் உயிர்ப்போடு இருப்பதை உணர்த்தும் வகையில் ஐந்து வயது சிறுமி ஒருத்தியின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், இரு கைகளும் இல்லாத தனது சக வகுப்புத் தோழனுக்கு அந்தச் சிறுமி மிகுந்த பொறுமையுடனும் அன்புடனும் உணவு ஊட்டி விடுகிறாள்.
5-year-old girl helps and feeds lunch to her classmate, who was born without arms. LET’S CHANGE THE WORLD WITH KINDNESS! pic.twitter.com/bCA1xlTR3Y
— GoodNewsCorrespondent (@GoodNewsCorres1) May 6, 2026
அவ்வப்போது அவனது முகத்தில் ஒட்டியிருக்கும் உணவையும் துடைத்துவிட்டு, ஒரு தாய்க்குரிய அக்கறையோடு அவள் நடந்துகொள்ளும் விதம் பார்ப்பவர்களின் கண்களைக் குளமாக்குகிறது.
“அன்பால் உலகை மாற்றுவோம்” என்ற வாசகத்துடன் பகிரப்பட்டுள்ள இந்த வீடியோ, உதவி செய்வதற்குப் பெரிய ஆளாக இருக்க வேண்டிய அவசியமில்லை,
பெரிய மனம் இருந்தால் போதும் என்பதை உலகுக்கு உரக்கச் சொல்லியுள்ளது. இந்தச் பிஞ்சு குழந்தையின் மேன்மையான குணத்தைப் பார்த்து வியந்துப்போன நெட்டிசன்கள், “இதுதான் உண்மையான கல்வி” எனப் பாராட்டி வருகின்றனர்.
