தமிழக அரசியலில் எதிர்பாராத சம்பவங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகிறது. தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களை கைப்பற்றி தமிழக வெற்றி கழகம் பெரும்பான்மை பெற்ற போதிலும் இன்னும் ஆட்சி அமைக்க முடியாத சூழல் நிலவுகிறது. காங்கிரஸ் கட்சி ஆதரவு கொடுத்து தற்போது 113 ஆக பலம் உயர்ந்த போதிலும் ஆளுநர் 118 இருந்தால் மட்டும்தான் ஆட்சி அமைக்க முடியும் என்று தொடர்ந்து அதிரடி காட்டி வருகிறார்.
இதற்கிடையில் அதிமுக எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு கூடுதல் தகவலாக திமுகவிடம் அதிமுக கட்சி பேசி வருவதாகவும் திமுகவின் ஆதரவோடு அதிமுக ஆட்சிக்கு வர இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமி முதலமைச்சராக இருப்பதாகவும் ஒரு தகவல் புயலை கிளப்பியுள்ளது.
இதனை கிட்டத்தட்ட திமுக மற்றும் அதிமுகவில் இருப்பவர்களும் மறைமுகமாக உறுதிப்படுத்தி வரும் நிலையில் இன்று செய்தி அவர்களை சந்தித்து அதிமுக மூத்த தலைவர் தம்பிதுரையிடம் இது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் தமிழக மக்களின் மனநிலை தற்போது எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரவேண்டும் என்பதில் தான் இருக்கிறது. மேலும் மக்களின் விருப்பப்படி கண்டிப்பாக எடப்பாடி பழனிச்சாமி தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராவார் என்று கூறினார்.
