தமிழக அரசியல் களத்தில் ஆட்சி அமைப்பதில் நிலவும் இழுபறிக்கு மத்தியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் ஆளுநருக்கு எதிராக மிகக் கடுமையான கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், முதல்வர் பதவி ஏற்க எந்தவித காலதாமதமும் செய்யாமல் ஆளுநர் உடனடியாக அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் விஜய் மட்டுமே தற்போது ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கும் நிலையில், ஆளுநர் அழைக்காமல் இருப்பது ஜனநாயகத்திற்கு எதிரானது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஆளுநர் மாளிகை மூலமாக பாஜக தனது அரசியல் லாபங்களை அடைய முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டிய அவர், இந்த அரசியல் விளையாட்டுகளை விடுத்து பெரும்பான்மை பெற்ற கட்சியை முறைப்படி ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
