உலகப்புகழ் பெற்ற ‘ஜானி ஜானி எஸ் பாப்பா’ என்ற ஆங்கிலப் பாடல், குழந்தைகளைப் பொய் சொல்ல ஊக்குவிப்பதாக உத்தரப்பிரதேச உயர்கல்வித்துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கான்பூரில் ஒப்பந்த ஆசிரியர்களிடம் உரையாற்றிய அவர், இந்தப் பாடலில் வரும் வரிகள் சிறு வயதிலேயே பொய் சொல்வதை இயல்பான ஒன்றாக மாற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

​இந்தியாவின் பாரம்பரியம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த கற்றல் முறைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். ஆங்கிலேயக் கல்வி முறையின் தாக்கம் இன்னும் நம்மிடம் நீடிப்பதைச் சுட்டிக்காட்டிய அமைச்சரின் இந்தக் கருத்து, தற்போது இணையதளங்களில் ஆதரவாகவும் எதிராகவும் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.