தமிழக அரசியல் வரலாற்றிலேயே இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் நிலநடுக்கம் இன்று காலை அரங்கேறி, கோட்டையையே அதிர வைத்துள்ளது.

108 தொகுதிகளைக் கைப்பற்றியும் பெரும்பான்மை கிடைக்காமல் தவித்து வரும் தவெக தலைவர் விஜய், தான் வென்ற இரண்டு தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்ய உள்ளதால் தற்போதைய தவெக பலம் 107 ஆகக் குறைந்துள்ள பரபரப்பான சூழலில், இன்று காலை அதிமுக முன்னாள் அமைச்சரும் எம்பியுமான சி.வி. சண்முகத்தின் இல்லத்தில் திடீரென 35 அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ஒன்று கூடி அவசர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தவெக-வின் மூத்த தலைவரான செங்கோட்டையன், அதிமுக எம்.எல்.ஏ-க்களைக் கொத்தாக வளைக்க ஸ்கெட்ச் போட்டுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில் இன்று காலை 35 எம்.எல்.ஏ-க்கள் சி.வி. சண்முகம் வீட்டில் குவிந்துள்ளதுடன், சென்னையில் இன்று நடைபெறவிருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள் கூட்டமும் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும் சி.வி சண்முகம் அலுவலகத்திற்கு முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி சென்ற நிலையில் இருவரும் ஒரே காரில் எடப்பாடி பழனிச்சாமியை சந்திக்க சென்றுள்ளனர். எஸ் பி வேலுமணி வெளியில் இருந்து தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு கொடுக்கலாம் என்று கூறும் நிலையில் அமைச்சரவையில் பங்கு வாங்கி கொண்டு ஆதரவு கொடுக்கலாம் என சிவி சண்முகம் கூறுவதாக கூறப்படுகிறது. மேலும் அதே நேரத்தில் ஒயர்ஸ் மணியன் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவே கொடுக்க வேண்டாம் எனக் கூறுவதாகவும் கூறப்படுகிறது.