தமிழகத்தில் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை கைப்பற்றி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. இருப்பினும் பெரும்பான்மைக்கு இன்னும் பத்து இடங்கள் தேவைப்படுவதால் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கேட்டு தமிழக வெற்றி கழகம் கடிதம் அனுப்பியது. இந்த நிலையில் ராகுல் காந்தி தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தின் போது தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆதரவு கொடுப்பது தொடர்பாக முடிவெடுக்கலாம் என கே.சி வேணுகோபால் அறிவித்திருந்த நிலையில் இன்று காலை 11 மணியளவில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தங்களுடைய முடிவை அறிவிப்பதாக சொன்னது.

ஆனால் திடீரென ஒரு நிர்வாகி வர தாமதமானதால் செய்தியாளர்கள் பேட்டி ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது தமிழக வெற்றி கழகத்திற்கு தங்களுடைய முழு ஆதரவை வழங்குவதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. மேலும் தமிழக வெற்றி கழகம் ஆட்சி அமைக்க காங்கிரஸ் மூலம் ஆதரவை அளிக்கும் என தேசிய காங்கிரஸ் தற்போது அதிகாரப்பூர்வமாக தெரிவித்துவிட்டதால் தமிழக அரசியல்களம் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது
