சென்னை திருவொற்றியூர் பகுதியில், கூலித்தொழிலாளி ஒருவர் பாறாங்கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனிவாசன் என்ற தொழிலாளி தனது நண்பர்களுடன் கடற்கரையில் பேசிக்கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஆகாஷ் என்ற இளைஞருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த இளைஞர் ஆடையின்றி நிர்வாணமாக நடனமாடி தகராறு செய்ததால், ஆத்திரமடைந்த சீனிவாசனும் அவரது நண்பர்களும் அவரைத் தாக்கி அங்கிருந்து விரட்டியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த ஆகாஷ், இரவு நேரத்தில் கடற்கரை அருகே உள்ள கோயில் வாசலில் தூங்கிக்கொண்டிருந்த சீனிவாசனின் தலையில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு அவரைத் துடிக்கத் துடிக்கக் கொலை செய்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் ஆகாஷைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
உயிரிழந்த சீனிவாசனின் உடல் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், காயமடைந்த ஆகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
