2026 தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 100-க்கும் மேற்பட்ட இடங்களை வென்று தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்பு பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
“விஜய் அண்ணனை ஒரு இடத்துக்கு பத்திரமா கூட்டிட்டு வர்றதுதான் கஷ்டமான வேலை, ஆனா அவரைத் தமிழ்நாட்டோட முதலமைச்சர் ஆக்குறது ரொம்ப ஈசி” என்று அவர் அன்று சொன்ன வார்த்தைகள் இன்று அப்படியே உண்மையாகி உள்ளது.
இதனைத் தேடிப் பிடித்த இணையவாசிகள், “அன்றே சொன்னார் புஸ்ஸி ஆனந்த்” என்று பதிவிட்டு சோஷியல் மீடியாவை அதிர வைத்து வருகின்றனர். தற்போது தவெக சட்டமன்றக் குழுத் தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், புஸ்ஸி ஆனந்தின் அந்தப் பழைய பேட்டி லட்சக்கணக்கான லைக்குகளைக் குவித்து வைரலாகி வருகிறது.
அன்றே சொன்னார் புஸ்ஸி. ‘அவரை இட்டுனு வரது, இட்டுனு போறது தான் கஷ்டம்.’ ஆனா “CM ஆக்குறது ஈசி🔥🔥🔥🔥” #TVKVijay #CMVijay pic.twitter.com/2ANfOu61Nz
— Aadhik Sri (@aadhik_vet09) May 4, 2026
“>
தனது தலைவன் மீதான நம்பிக்கையில் அவர் சொன்ன தீர்க்கதரிசனப் பேச்சு பலித்ததைக் கண்டு தவெக தொண்டர்கள் நெகிழ்ச்சியில் உள்ளனர். விஜய் கோட்டையை நோக்கித் தனது முதல் அடியை எடுத்து வைத்துள்ள இந்த நேரத்தில், புஸ்ஸி ஆனந்தின் இந்த வைரல் பஞ்ச் வரிகள் தேர்தலுக்குப் பிந்தைய பேசுபொருளாக மாறியுள்ளது.
