தமிழகத்தில் புதிய அரசு அமைப்பதற்கான அரசியல் களம் டெல்லி வரை சூடுபிடித்துள்ள நிலையில், தவெக தலைவர் விஜய் தங்களுக்கு ஆதரவு கேட்டு அதிகாரப்பூர்வமாகக் கடிதம் எழுதியுள்ளதை அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் டெல்லியில் உறுதிப்படுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியுடன் நடத்திய அவசர மற்றும் ரகசிய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தமிழக மக்களின் உணர்வுகளையும், அங்கு ஏற்பட்டுள்ள புதிய அரசியல் மாற்றத்தையும் முழுமையாக மதித்துச் சாதகமான முடிவை எடுக்குமாறு” தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கு (TNCC) காங்கிரஸ் தேசியத் தலைமை தாராளமாக அறிவுறுத்தியுள்ளதாக அதிரடியான தகவலை வெளியிட்டுள்ளார்.

டெல்லி தலைமையிடமிருந்து பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளதால், இன்று  சத்தியமூர்த்தி பவனில் நடக்கவுள்ள கூட்டத்தில் தவெக-வுக்கு ஆதரவளிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவை நோக்கித் தமிழக காங்கிரஸ் நகர்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. திமுக கூட்டணியில் நீண்ட காலம் அங்கம் வகித்த காங்கிரஸ், தற்போது தவெக பக்கம் சாய்வது தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய ‘பூகம்பத்தை’ ஏற்படுத்தியுள்ளது.

“>