தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் பள்ளி ஆசிரியை வசந்தா அவர்கள் தனது மகிழ்ச்சியை ஊடகங்களிடம் பகிர்ந்துள்ளார்.
விஜய்யின் சிறுவயது நினைவுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், “நான் விஜய்க்கு வகுப்பு ஆசிரியராக (Class Teacher) இருந்தேன் என்று தெரிந்தவுடனேயே, பலரும் என்னைத் தேடி வந்து என் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குகிறார்கள்” என்று கண்கள் பனிக்கத் தெரிவித்துள்ளார்.
LATEST 🔔 : விஜய் அண்ணாவின் பள்ளி ஆசிரியை வசந்தா மகிழ்ச்சி பொங்க பேட்டி ! ❤️
• நான் விஜய்யோட CLASS TEACHER -னு தெரிஞ்ச உடனே என்னோட காலைல வந்து எல்லாம் விழுகுறங்க 😄🙏@TVKPartyHQ | #WhistlePodupic.twitter.com/eS14o2oS2P
— Prakash Vijay (@PrakazVijay_Of) May 4, 2026
பள்ளியில் படிக்கும்போதே விஜய் மிகவும் அமைதியானவர் என்றும், இன்று அவர் ஒரு மாநிலத்தின் முக்கியத் தலைவராக உயர்ந்திருப்பதைப் பார்க்கும்போது ஒரு ஆசிரியையாகப் பெருமிதம் கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
விஜய்யின் வெற்றி என்பது அவரது உழைப்பிற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பாராட்டிய அவர், தனது மாணவர் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும் என மனதார வாழ்த்தியுள்ளார். ஆசிரியையின் இந்தப் பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் தவெக தொண்டர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.
