லக்னோவைச் சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுநரான உபேந்திர குப்தாவின் மகள்கள், வறுமையையும் கடினமான சூழ்நிலைகளையும் வென்று நாட்டின் உயரிய பதவிகளான ஐஏஎஸ் மற்றும் சிபிஐ அதிகாரிகளாக உயர்ந்துள்ளனர். விலையுயர்ந்த பயிற்சி மையங்களுக்குச் செல்லாமல், வீட்டில் இருந்தபடியே சுய முயற்சியால் படித்து இந்தச் சாதனையை அவர்கள் படைத்துள்ளனர்.
தனது ஒரு மகள் ஏற்கனவே ஐஏஎஸ் அதிகாரியாக இருக்கும் நிலையில், இரண்டாவது மகள் சிபிஐ அதிகாரியாகத் தேர்வான செய்தியைக் கேட்டு உபேந்திரா ஆனந்தக் கண்ணீரில் மூழ்கியுள்ளார். இது தொடர்பான காணொளி இணையத்தில் வைரலாகி பலரது மனங்களையும் நெகிழச் செய்துள்ளது.
பொருளாதார நெருக்கடியால் தனது படிப்பைத் தொடர முடியாத உபேந்திரா, தன் மகள்களின் கனவுகள் சிதைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார். போக்குவரத்து நெரிசலையும் உடல் நலத்தையும் பொருட்படுத்தாமல் இரவும் பகலும் கார் ஓட்டி மகள்களின் கல்விச் செலவை கவனித்துக்கொண்டார்.
View this post on Instagram
“>
“இப்போது நான் ஒரு சிபிஐ அதிகாரியின் தந்தை” என்று அவர் பெருமிதத்துடன் கூறுவது, ஒரு உழைப்பாளித் தந்தையின் வாழ்நாள் வெற்றிக்குச் சான்றாக அமைந்துள்ளது. வசதிகள் இல்லை என்றாலும் விடாமுயற்சி இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு இந்தச் சகோதரிகள் ஒரு சிறந்த உதாரணமாகத் திகழ்கின்றனர்.
