உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே உறவுமுறையையே கொச்சைப்படுத்தும் ஒரு விசித்திரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. அச்னேரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தைச் சேர்ந்த 8 குழந்தைகளின் தாயான ஒரு பெண், தனது மருமகனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.

அந்த மருமகனுக்கும் ஏற்கனவே 5 குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது. திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக மாமியார் வீட்டிற்கு வந்த மருமகன், மருதாணி வைப்பதாகக் கூறி மாமியாரைத் தோட்டத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு இருவரும் நெருக்கமாக இருந்ததை உறவினர்கள் பார்த்ததால் ஏற்பட்ட மோதலில், மருமகன் தனது மாமியாரை பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊரை விட்டே தப்பியோடிவிட்டார்.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இவர்கள் இருவரும் இப்படி ஓடிவிடுவது இது முதல் முறையல்ல. சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பே இவர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிப்போய், பின்னர் டெல்லியில் ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்தபோது குடும்பத்தினரால் கண்டுபிடிக்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.

அப்போது குடும்ப மானத்திற்காக இந்த விஷயம் மூடி மறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அதே நபர் தனது மாமியாரை அழைத்துச் சென்றதால், அதிர்ச்சியடைந்த பெண்ணின் கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தலைமறைவாக உள்ள மாமியார் மற்றும் மருமகனைப் பிடிக்க காவல்துறை தனிப்படை அமைத்து தீவிரமாகத் தேடி வருகிறது.