பொதுச் சொத்தான ரயிலை சேதப்படுத்தும் இந்த மூடர்களின் அட்டூழியம் எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கிறது. ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக அமைக்கப்பட்ட இருக்கைகளைக் கிழிப்பதும், மின்விசிறிகளைப் பிடித்துத் தொங்கி உடைப்பதும் எனத் தங்களது அநாகரிகமான செயலை ஏதோ ‘வீரச் செயல்’ போல வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
इन बेवक़ूफ़ों को इसी में मजा आ रहा है. ट्रेन के सीट उखाड़ते हुए वीडियो बना रहे हैं. ऐसे मनबढ़ों का कायदे से इलाज होना चाहिए. pic.twitter.com/YocQP3q5Yg
— Priya singh (@priyarajputlive) May 2, 2026
“>
“ரயில்வே நிர்வாகம் சரியில்லை, வசதிகள் இல்லை” என்று குறை சொல்லும் அதே மக்கள் கூட்டத்தில், இதுபோன்ற விஷமிகள் பொதுச் சொத்தை சீரழிப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) இந்த நபர்களைக் கண்டறிந்து குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கொந்தளித்து வருகின்றனர். இது ஒரு ஜாலி விளையாட்டு அல்ல, தேசத்தின் சொத்துக்கு இழைக்கப்படும் துரோகம் என்பதை இந்த வாலிபர்களுக்குச் சட்டத்தின் மூலம் உணர்த்த வேண்டிய நேரம் இது.
