அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வரும் கனவ் என்ற இந்திய மாணவர், வெளிநாட்டு வாழ்க்கை என்பது வெளியே தெரிவது போல அவ்வளவு எளிதானது அல்ல என்பதைப் பகிர்ந்துள்ள வீடியோ இணையத்தில் அதிக கவனம் பெற்றுள்ளது.

19 வயதில் தனியாக வாழ்வது என்பது பார்ப்பதற்கு அழகாகத் தெரிந்தாலும், நிஜத்தில் அது மிகுந்த சவால்கள் நிறைந்தது என்று அவர் கூறுகிறார்.

சாப்பாடு சமைப்பது, பணத்தை மேலாண்மை செய்வது, வரிக் கணக்குகள் மற்றும் முற்றிலும் மாறுபட்ட கல்வி முறை என ஒவ்வொன்றையும் ஒரு மாணவராகத் தனியாகக் கையாள்வது மிகுந்த மன அழுத்தத்தைத் தருவதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, பண்டிகைக் காலங்களில் குடும்பத்தைப் பிரிந்து இருப்பது பெரும் வலியைத் தருவதாகக் கனவ் குறிப்பிட்டு

 

View this post on Instagram

 

A post shared by @kanav3.md

“>ள்ளார். இந்தியாவில் உள்ள உறவினர்கள் அனைவரும் ஒன்று கூடிச் சிரித்துப் பேசி மகிழ்வதை, ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் இருந்து வெறும் வீடியோ காலில் மட்டுமே பார்ப்பது மிகுந்த தனிமை உணர்வைத் தருவதாக அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், இத்தகைய கடினமான சூழ்நிலைகள் ஒருவரை மனரீதியாக வலிமையாக்கும் என்றும், இது வெறும் படிப்புக்கான பயணம் மட்டுமல்ல, தன்னைத்தானே செதுக்கிக் கொள்ளும் ஒரு பயணம் என்றும் அவர் தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.