33 ஆண்டுகளாகச் செயல்பட்டு வந்த அமெரிக்காவின் பிரபல விமான நிறுவனமான ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தனது அனைத்துச் சேவைகளையும் உடனடியாக நிறுத்துவதாக அதிரடியாக அறிவித்துள்ளது.

சுமார் 500 மில்லியன் டாலர் மதிப்பிலான மீட்பு ஒப்பந்தம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, நிறுவனம் திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் அனைத்து விமானப் பயணங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன மிகக் குறைந்த கட்டணத்தில் விமானச் சேவையை வழங்கி வந்த இந்த நிறுவனம், தனது 33 ஆண்டு காலப் பயணத்தை இப்படி ஒரு இக்கட்டான நிலையில் முடித்துக் கொள்வது விமானப் போக்குவரத்துத் துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பாதிக்கப்பட்டுள்ள பயணிகளுக்கு, அவர்கள் டிக்கெட் முன்பதிவு செய்யப் பயன்படுத்திய வங்கி கணக்கிற்கே பணம் தானாகவே திருப்பித் தரப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆனால், மற்ற விமானங்களில் பயணிகளை மாற்றி அனுப்பும் வசதியை தங்களால் செய்ய முடியாது என்றும், வாடிக்கையாளர் சேவை மையம் இனி செயல்படாது என்றும் ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் தெளிவுபடுத்தியுள்ளது.

“>

 

“இன்னும் பல ஆண்டுகள் சேவை செய்ய விரும்பினோம், ஆனால் சூழ்நிலை இடம்தரவில்லை” என அந்த நிறுவனம் தனது எக்ஸ் (X) பக்கத்தில் உருக்கமாகத் தெரிவித்துள்ளது.