கடல் பயணப் பிரியரான கிறிஸ்டோபர் சாங் என்பவர் ஆழ்கடலில் டைவிங் செய்தபோது, ஆமை ஒன்று அவரைத் துரத்தி வந்து ‘பளார்’ என ஒரு அறை விட்ட வீடியோ இணையத்தில் செம வைரலாகி வருகிறது. வழக்கமாக ஆமைகள் மனிதர்களைப் பார்த்தால் விலகிச் செல்லும், ஆனால் இந்த ஆமை கிறிஸ்டோபர் எங்கு சென்றாலும் விடாமல் பின்தொடர்ந்து வந்துள்ளது.

ஒருகட்டத்தில் மிக அருகில் வந்த அந்த ஆமை, எதிர்பாராத விதமாக அவரது முகத்தில் ஒரு தட்டு தட்டிவிட்டு, அசால்ட்டாக நீந்திச் சென்றது. இந்த விநோத அனுபவத்தைக் கிறிஸ்டோபர் “I got slapped by a turtle” என்ற தலைப்பில் வீடியோவாகப் பகிர்ந்துள்ளார்.

சுமார் பத்து லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ள இந்த வீடியோவில், பலரும் கிண்டலாகக் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். “அடுத்தவர் வீட்டுக்குள் புகுந்து சத்தம் போட்டால் ஆமைக்குக் கோபம் வராதா?” என்றும், “ஆமையின் அனுமதி இல்லாமல் வீடியோ எடுத்தால் இப்படித்தான் நடக்கும்” என்றும் நெட்டிசன்கள் ஜாலியாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Christopher Chang (@lifeoftopher00)

“>

இதுவரை நூற்றுக்கணக்கான ஆமைகளைச் சந்தித்திருந்தாலும், இப்படி ஒரு ‘அடி’ வாங்கியது இதுவே முதல்முறை என கிறிஸ்டோபர் ஆச்சரியத்துடன் தெரிவித்துள்ளார். ஆமையிடம் அடி வாங்கியதும் பயந்துபோன அவர், உடனே படகை அழைத்து கடலில் இருந்து வெளியேறிவிட்டார்.