சமூக வலைதளங்களில் எப்போதுமே வினோதமான வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது, ஆனால் இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் அல்லது பொது இடங்களில் செல்போன் சார்ஜ் செய்வதற்காக வைக்கப்பட்டிருக்கும் ‘சார்ஜிங் பாயிண்ட்டுகளை’ சிலர் மிகவும் மோசமான முறையில் கையாண்டுள்ளனர்.

அந்த வீடியோவில், செல்போன் சார்ஜரை சொருக வேண்டிய அந்த சிறிய துளைகளை, சிலர் குப்பைத் தொட்டி போல பயன்படுத்தி, அதில் காகிதங்கள் மற்றும் தேவையற்ற குப்பைகளைத் திணித்து வைத்துள்ளனர்.

இதைப் பார்த்த நெட்டிசன்கள், “பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் அறிவு கூட இல்லையா?” என்றும், “இதனால் மின் கசிவு ஏற்பட்டு பெரிய விபத்து நேரிட்டால் யார் பொறுப்பு?” என்றும் ஆவேசமாகக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

மக்களின் இந்த பொறுப்பற்ற செயலை வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்த வீடியோ, தற்போது இணையத்தில் காட்டுத்தீயாகப் பரவி விவாதத்தை கிளப்பியுள்ளது.