சமூக வலைதளங்களில் எப்போதுமே சண்டை வீடியோக்களுக்குப் பஞ்சம் இருக்காது, ஆனால் இப்போது வைரலாகி வரும் ஒரு வீடியோ நெட்டிசன்களை விழுந்து விழுந்து சிரிக்க வைத்துள்ளது.

இரண்டு வயது முதிர்ந்த சகோதரிகள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட சண்டைதான் இப்போது டாப் டிரெண்டிங். ஒரு குடும்ப விழாவில் மூன்று நான்கு மூத்த பெண்களும், ஒரு முதியவரும் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும்போது, திடீரென இரண்டு பாட்டிமார்களுக்கு இடையே வாக்குவாதம் வெடிக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by TV1 INDIA खबरों का नया अड्डा* (@tv1indialive)

கோபத்தின் உச்சத்துக்கே சென்ற ஒரு பாட்டி, “நீ ரொம்ப ஓவரா பண்ற, உன் மண்டையை இப்போ உடைப்பேன் பாரு” என மிரட்ட, பதிலுக்கு அடுத்த பாட்டி சற்றும் சளைக்காமல் “உன் பல்லை எல்லாம் கழட்டிடுவேன்” என எகிறுகிறார்.

இவர்களது இந்த ‘ஆக்ரோஷமான’ அதேசமயம் வேடிக்கையான மிரட்டல்களைக் கண்டு பக்கத்தில் இருப்பவர்கள் பயப்படுவதற்குப் பதிலாக, வேடிக்கை பார்த்து சிரிக்கத் தொடங்கிவிட்டனர்.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவை பார்த்த பலரும், “இதுதான் உலகப்போர் 3-ஆ?” என்றும், “எங்கள் வீட்டிலும் இதே நிலைமைதான்” என்றும் கிண்டலாகக் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வயதான காலத்திலும் சற்றும் குறையாத இவர்களது அந்த சுட்டித்தனமான சண்டை, பார்ப்பவர்களை நெகிழ்ச்சியிலும் மகிழ்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.