அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தான் பாடம் சொல்லிக் கொடுத்த மாணவருடன் தகாத உறவு வைத்திருந்த பள்ளி ஆசிரியை ஜோஸ்லின் சான்ரோமனுக்கு 4 முதல் 15 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2023-ஆம் ஆண்டு ஆசிரியை சான்ரோமன், தனது வீட்டில் வைத்து அந்த மாணவருடன் பாலியல் உறவு கொண்டதோடு, அந்த அருவருப்பான செயலை வீடியோவாகவும் பதிவு செய்துள்ளார்.

இந்தத் தகவலை அவரே தனது சக ஊழியரிடம் கூறியதையடுத்து, காவல்துறையினர் அவரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செரில் மேத்யூஸ், ஒரு ஆசிரியையாக இருந்துகொண்டு மாணவனுக்குப் பாதுகாப்பு அளிக்காமல், இத்தகைய சட்டவிரோத செயலில் ஈடுபட்டது அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்தார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து, கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி அவருக்கு இந்த நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவம், மாணவர்களின் பாதுகாப்பு குறித்த கேள்விகளை மீண்டும் எழுப்பியுள்ளது.