ஈரான் துறைமுகங்கள் மற்றும் கடற்பகுதியை அமெரிக்கா முற்றுகையிட்டுள்ளதால், பதிலுக்கு ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடி வைத்துள்ளது. இது உலக அளவில் கச்சா எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விநியோகத்தை மிகக் கடுமையாகப் பாதித்துள்ளது. இந்தச் சிக்கலைத் தீர்க்கவும், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்கவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது ஒரு புதிய திட்டத்தை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டத்தின்படி, ஈரான் மீதான தனது கடல்வழி முற்றுகையைத் தொடர்வதோடு, எரிசக்தி விநியோகத்தைத் தடுக்கும் ஈரானின் முயற்சிகளுக்கு எதிராக அமெரிக்கா தனது நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளது.
ஈரானை வழிக்குக் கொண்டு வருவதற்காகப் பல்வேறு ராஜதந்திர மற்றும் கொள்கை ரீதியான நடவடிக்கைகளை டிரம்ப் பரிசீலித்து வருவதாக அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
