இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் விராட் கோலி இன்று அடைந்துள்ள உச்சத்திற்கு எம்.எஸ்.தோனி தான் முக்கிய காரணம் என்று பாகிஸ்தான் வீரர் உமர் அக்மல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

2013-ஆம் ஆண்டு இந்திய சுற்றுப்பயணத்தின் போது, கோலி ஃபார்ம் அவுட்டில் இருந்ததால் அவரை அணியை விட்டு நீக்கிவிட்டு உள்நாட்டுப் போட்டிகளில் விளையாட அனுப்ப தேர்வுக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

அப்போது குறுக்கிட்ட தோனி, “விராட் கோலியை நீக்கினால், அவருடன் சேர்த்து எனக்கும் டிக்கெட் முன்பதிவு செய்யுங்கள், நானும் அவருடன் சேர்ந்து விளையாடச் செல்கிறேன்” என்று துணிச்சலாகக் கூறி கோலியை அணியில் தக்கவைத்துள்ளார்.

“>

 

சில போட்டிகளில் சொதப்பினால் ஒரு சிறந்த வீரரை நீக்கிவிடக் கூடாது என்பதில் தோனி உறுதியாக இருந்ததாகவும், கோலி எதிர்காலத்தில் ஒரு மிகப்பெரிய வீரராக வருவார் என்று அவர் அன்றே கணித்ததாகவும் அக்மல் பாராட்டியுள்ளார்.

தோனியின் அந்தப் பெருந்தன்மையான முடிவே இன்று கோலியை உலகத் தரம் வாய்ந்த வீரராக மாற்றியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.