பெங்களூருவில் காதலனை இளம்பெண் ஒருவர் உயிரோடு எரித்துக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த நபர் நவீன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே நீண்ட நாட்களாக காதல் இருந்து வந்துள்ளது.

இந்நிலையில் நவீன் வேறொரு பெண்ணை திருமணம் செய்யப் போவதாகத் தெரியவந்ததால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், தனது காதலனைத் திட்டமிட்டு ஒதுக்குப்புறமான இடத்திற்கு அழைத்துச் சென்று தீயிட்டுப் படுகொலை செய்துள்ளார்.

இந்த கொடூரச் செயலுக்குப் பிறகு, போலீஸ் விசாரணையில் அந்தப் பெண் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். தன்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒருவரைத் திருமணம் செய்ய முயன்றதால் ஏற்பட்ட ஆத்திரமே இந்தத் தீவிரமான முடிவுக்குக் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அந்தப் பெண்ணைக் கைது செய்துள்ள காவல்துறையினர், இந்தச் சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.