அதிதி என்ற இளம்பெண் தனக்கு வேலை கிடைக்க வேண்டிய ஒரு முக்கியமான போன் அழைப்பை, தேவையற்ற ‘ஸ்பேம்’அழைப்பு என நினைத்து பிளாக் செய்துள்ளார். அந்த அழைப்பு அவர் விண்ணப்பித்திருந்த நிறுவனத்தின் ஹெச் ஆர் அதிகாரியிடமிருந்து வந்தது என்பது பிறகுதான் அவருக்குத் தெரியவந்தது. தான் தவறுதலாகச் செய்த இந்தச் செயலால், அந்த நிறுவனம் அவரை “பொறுப்பற்றவர்” எனக் கூறி வேலை வழங்க மறுத்துவிட்டது.

இந்த வருத்தமானச் சம்பவத்தை அதிதி தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் வேதனையுடன் பகிர்ந்துள்ளார். இதைப் பார்த்த இணையவாசிகள் பலரும் அவருக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளைப் புறக்கணிப்பது இக்காலத்தில் சாதாரணமான ஒன்றுதான் என்றும், இதற்காக ஒருவரின் வேலையைத் தடுப்பது நியாயமற்றது என்றும் கூறி அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.