ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிலவி வரும் போர் பதற்றம் குறித்து ஜெர்மனி அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த மோதலில் இருந்து வெளியேற அமெரிக்காவிடம் முறையான திட்டம் எதுவும் இல்லை என்று விமர்சித்துள்ள அவர், ஈரான் எதிர்பார்த்ததை விட மிகவும் வலுவாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, உலக நாடுகளுக்குத் தேவையான 20 சதவீத எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கண்ணிவெடிகள் நிரப்பப்பட்டிருப்பது உலகப் பொருளாதாரத்திற்கே பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
இந்த போர் நீடிப்பது ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவின் பொருளாதாரத்தை நேரடியாகப் பாதிப்பதாக அதிபர் மெர்ஸ் தெரிவித்துள்ளார். ஈரான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள அவர், அங்குள்ள மக்கள் தங்கள் ஆட்சியாளர்களால் அவதிப்படுவதாகக் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் நெருங்கிய நண்பனான ஜெர்மனியே தற்போது அமெரிக்காவின் போர் உத்தியைக் கேள்வி எழுப்பியுள்ளது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வு போன்ற அபாயங்களைத் தவிர்க்க இந்தப் போர் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்பதே ஜெர்மனியின் கோரிக்கையாக உள்ளது.
