அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பங்கேற்ற விருந்து நிகழ்ச்சிக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய கோல் தாமஸ் ஆலன் என்பவருக்கு, இந்திய மனைவி இருப்பதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் முற்றிலும் பொய்யானது என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பாகிஸ்தானைச் சேர்ந்த சில எக்ஸ் (X) கணக்குகளில் இருந்து பரப்பப்பட்ட இந்தத் தகவலில், ‘பிரியங்கா ராவ்’ என்ற இந்தியப் பெண்ணைத் திருமணம் செய்ததால் அவர் தீவிரவாத கொள்கைக்கு மாறினார் என்று கூறப்பட்டிருந்தது.
ஆனால், அந்தப் பெண்ணின் புகைப்படம் மற்றும் பாஸ்போர்ட் ஆகியவை ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட போலியானவை என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் கலிபோர்னியாவைச் சேர்ந்த ஒரு பொறியியல் பட்டதாரி என்பதும், அவர் அமெரிக்க அரசின் மீதுள்ள தனிப்பட்ட கோபத்தால் இச்செயலைச் செய்ததும் விசாரணையில் உறுதியாகியுள்ளது.
அந்தப் போலி பாஸ்போர்ட்டில் பெயர்கள் மற்றும் இந்தி எழுத்துக்கள் தவறாக இருந்ததே அது பொய் என்பதற்குப் பெரிய ஆதாரமாக அமைந்தது. முக்கியமான ஒரு சம்பவத்தைப் பயன்படுத்தி இந்தியாவுக்கு எதிராகப் பரப்பப்பட்ட இந்தச் சதித் திட்டம் தற்போது அம்பலமாகியுள்ளது. இதை யாரும் நம்பவோ அல்லது பகிரவோ வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.
