நடப்பு ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரிங்கு சிங் மீண்டும் ஒருமுறை தனது அபார ஆட்டத்தால் அணியை சரிவில் இருந்து மீட்டுள்ளார்.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளே முடிவதற்குள்ளேயே 31 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த இக்கட்டான சூழலில் களம் புகுந்த ரிங்கு சிங், மிகவும் நிதானமாகவும் அதேசமயம் கணக்கிட்டும் விளையாடி அணியை கௌரவமான ஸ்கோருக்கு அழைத்துச் சென்றார்.
அவருக்கு உறுதுணையாக ஆடிய கேமரூன் கிரீன், 21 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, 19 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா 129 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
திக்வேஷ் ரதி வீசிய கடைசி ஓவரில் ரிங்கு சிங் தனது விஸ்வரூபத்தைக் காட்டினார். அந்த ஓவரின் முதல் நான்கு பந்துகளையும் தொடர்ச்சியாக சிக்ஸர்களுக்குப் பறக்கவிட்டு மைதானத்தை அதிரவைத்தார். இதன் மூலம் 51 பந்துகளில் 83 ரன்கள் (7 பவுண்டரி, 5 சிக்ஸர்) குவித்த அவர், கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 155 ரன்களை எட்ட உதவினார்.
6⃣, 6⃣, 6⃣, 6⃣ 🤯
🎥 Enjoy Rinku Singh’s sizzling ball-striking in the last over 🔥
Scorecard ▶️ https://t.co/elFxwvCeWO#TATAIPL | #KhelBindaas | #LSGvKKR | @KKRiders pic.twitter.com/98wGgWK14c
— IndianPremierLeague (@IPL) April 26, 2026
45 பந்துகளில் 59 ரன்கள் எடுத்திருந்த ரிங்கு, கடைசி ஓவரின் அதிரடியால் 83 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் லக்னோ அணி இறுதியில் தோல்வி அடைந்தது.
