ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு வீரர்கள் டிம் டேவிட் மற்றும் ரொமாரியோ ஷெப்பர்ட் ஆகியோர் டெல்லி வீதிகளில் ரசிகர்களுடன் இணைந்து ‘கல்லி கிரிக்கெட்’ விளையாடி மகிழ்ந்தனர். குறுகலான தெருக்களில் இந்த நட்சத்திர வீரர்கள் சிக்ஸர்களைப் பறக்கவிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

எவ்வித தயக்கமும் இன்றி ரசிகர்களுடன் இயல்பாகப் பழகிய இவர்களின் செயலை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.நடப்புத் தொடரில் ஆர்சிபி அணி 7 போட்டிகளில் 5 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. குறிப்பாக டிம் டேவிட் அதிரடியான ஃபார்மில் உள்ளார்.
<a href="http://

“>

இன்று (ஏப்ரல் 27, திங்கள்) டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில், டெல்லி அணியை வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தைத் தொடர ஆர்சிபி அணி முனைப்பு காட்டி வருகிறது. தெருவில் விளையாடிய இந்த உத்வேகம் இன்றைய போட்டியிலும் எதிரொலிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.