சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 240 ரூபாய் வரையில் அதிகரித்து ஒரு சவரன் 1,13,840 ரூபாய்க்கும், ஒரு கிராம் 14,230 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேப்போன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் அதிகரித்து ஒரு கிராம் 15,524 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,192 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 270 ரூபாய்க்கும் ஒரு கிலோ வெள்ளி 2,70,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
