தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று கோட்டையைப் பிடிப்போம் என்ற அதீத நம்பிக்கையில் உள்ளார்.
வாக்குப்பதிவு முடிந்து முடிவுகளுக்காகக் காத்திருக்கும் வேளையில், சமூக வலைதளங்களில் தவெக-விற்குச் சாதகமாகப் பரவும் வீடியோக்கள் மற்றும் மக்களின் ஆதரவு அலை விஜய்க்குப் பெரும் உற்சாகத்தை அளித்துள்ளன. இதனைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய வேட்பாளர்களுடன் காணொலி வாயிலாக ரகசிய ஆலோசனை நடத்திய விஜய், ஆட்சி அமைந்தால் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதித்துள்ளார்.
குறிப்பாக, முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் தென் மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு முக்கிய நிர்வாகி என இருவரைத் துணை முதலமைச்சர்களாக நியமிக்க விஜய் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன. மூத்த அரசியல் அனுபவம் மற்றும் மண்டல ரீதியிலான செல்வாக்கு ஆகியவற்றைச் சமன் செய்யும் நோக்கில் இந்த அதிரடி முடிவை அவர் எடுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் முணுமுணுக்கின்றன.
