ஐபிஎல் 2026 தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த 15 வயது வீரர் வைபவ் சூர்யவன்ஷி, தனது தந்தைக்காக கைகூப்பி மன்னிப்பு கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சதம் அடித்துவிட்டு பெவிலியன் திரும்பிய வைபவ், அங்கு இருந்த பயிற்சியாளர்கள் மற்றும் மூத்த வீரர்களின் காலில் விழுந்து ஆசி வாங்கத் தவறிவிட்டார். இதைக் கவனித்த அவரது தந்தை, உடனடியாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாளரைத் தொடர்பு கொண்டு, “என் மகன் ஏன் பெரியவர்களின் ஆசி பெறவில்லை?” என்று கண்டிப்புடன் கேட்டுள்ளார்.
இந்தச் செய்தி மேலாளர் மூலம் வைபவ்விற்குத் தெரியப்படுத்தப்பட்டதும், அவர் கேமரா முன்னாலேயே கைகூப்பி தனது தந்தையிடம் மன்னிப்பு கேட்டார். “அப்போது நிறைய பேர் இருந்ததால் பதற்றத்தில் கவனிக்காமல் வந்துவிட்டேன், அப்பா என்னை மன்னித்துவிடுங்கள்” என்று அவர் உருக்கமாகத் தெரிவித்தார்.
A first-ball duck a few days ago to the fastest century by an Indian last night.
Vaibhav Sooryavanshi just refuses to give up 👏💗 pic.twitter.com/IqDaWvkAu9
— Rajasthan Royals (@rajasthanroyals) April 26, 2026
“>
மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையிலும், புகழைத் தலைக்கு ஏற்றிக்கொள்ளாமல் தனது தந்தை கற்றுக்கொடுத்த ஒழுக்கத்திற்கும் கலாச்சாரத்திற்கும் வைபவ் முக்கியத்துவம் கொடுத்த விதம் சமூக வலைதளங்களில் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.
