தமிழ் சினிமாவில் தற்போது ஹாட் டாப்பிக்காக இருப்பது விஜய் – சங்கீதா விவாகரத்து வதந்திகளும், அதில் த்ரிஷாவின் பெயர் இணைத்து பேசப்படுவதும்தான். இந்நிலையில், விஜய்யின் முதல் நாயகியான வனிதா விஜயகுமார் இது குறித்துப் பல அதிரடி தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
“த்ரிஷா எல்லோரிடமும் மரியாதையாகப் பழகக்கூடியவர். த்ரிஷாவின் வாழ்க்கையைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும், ஆனால் அதையெல்லாம் இப்போது பொதுவெளியில் பேச முடியாது. அதற்கு ஒரு நேரம் வரும். எதையும் தெரியாமல் அடுத்தவர்களைப் பற்றி இஷ்டத்துக்குப் பேசக்கூடாது” எனப் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகப் பேசியுள்ளார்.
மேலும், ‘சந்திரலேகா’ படத்தில் விஜய்யுடன் நடித்த அனுபவத்தைப் பகிர்ந்த வனிதா, “அந்தச் சமயத்தில் விஜய்யை விட எனக்குத்தான் சம்பளம் அதிகம். விஜய் ஃப்ளைட்டில் வர ஆசைப்பட்டாலும், கஷ்டம் தெரிய வேண்டும் என்பதற்காக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் அவருக்கு ட்ரெயின் டிக்கெட்தான் எடுப்பார்” என யாரும் அறியாத சுவாரஸ்ய தகவலை வெளியிட்டுள்ளார்.
த்ரிஷாவுடனான நட்பு மற்றும் விஜய்யின் ஆரம்பகால போராட்டங்கள் குறித்து வனிதா பேசியுள்ள இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் தளபதி ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
