காஷ்மீரில் உள்ள வைஷ்ணோ தேவி கோவிலில் வரலாற்றிலேயே இல்லாத ஒரு மிகப்பெரிய “வெள்ளி மோசடி” விவகாரம் இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பக்தர்கள் அம்மனுக்கு காணிக்கையாக வழங்கிய சுமார் 20 டன் வெள்ளியை உருக்குவதற்காக டெல்லியில் உள்ள அரசு மின்ட்டிற்கு (Mint) கோவில் நிர்வாகம் அனுப்பியது. அந்த வெள்ளியின் மதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பரிசோதனையில் வெளிவந்த முடிவுகள் அதிகாரிகளையே நிலைகுலையச் செய்துள்ளன.

​சுமார் 20 டன் எடையில், வெறும் 5 முதல் 6 சதவீதம் மட்டுமே உண்மையான வெள்ளி என்பது தெரியவந்துள்ளது. அதாவது, 550 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளியில் வெறும் 30 கோடி ரூபாய் மதிப்புள்ள வெள்ளி மட்டுமே மிஞ்சியுள்ளது. மீதமுள்ள 95 சதவீதமும் இரும்பு மற்றும் கேட்மியம் (Cadmium) போன்ற மலிவான மற்றும் நச்சுத்தன்மை கொண்ட உலோகங்களால் ஆனது எனத் தெரியவந்துள்ளது.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஜம்மு-காஷ்மீர் அரசியல் தலைவர்கள், இது பக்தர்களின் நம்பிக்கைக்கு இழைக்கப்பட்ட துரோகம் எனத் தெரிவித்துள்ளனர். கோவில் நிர்வாகம் மற்றும் வியாபாரிகள் மீது கடுமையான விசாரணை நடத்த வேண்டும் எனப் போராட்டங்கள் வெடித்துள்ளன.