தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தேர்தல் பிரச்சாரத்தின் போது “உங்கள் பெற்றோரிடம் அடம் பிடித்தாவது தவெக-வுக்கு வாக்களிக்கச் செய்யுங்கள்” எனப் பேசியது தற்போது புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. விஜய்யின் இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, கோவை மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் விசிக நிர்வாகி பாலகிருஷ்ணன் என்பவர் அதிரடிப் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அந்தப் புகாரில், “விஜய் பேசியதைக் கேட்ட எனது 5 வயது மகன், தவெக-வுக்குத்தான் வாக்களிக்க வேண்டும் என என்னிடம் அடம் பிடித்து வருகிறான். இதனால் எனக்குப் பெரும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளை இப்படித் தூண்டிவிடுவது சட்டப்படி தவறு, எனவே விஜய் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்க்கு எதிராகக் கோவையில் கிளம்பியுள்ள இந்தப் புகார் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
