உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில், அமெரிக்க நிறுவனங்களான கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் மெட்டா ஆகியவற்றிற்குப் போட்டியாகச் சீனாவின் ‘டீப் சீக்’நிறுவனம் களமிறங்கியுள்ளது. நொடிகளில் பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் துல்லியமாக வழங்கும் இந்த நிறுவனத்தின் ஏ.ஐ. தொழில்நுட்பம், ஏற்கனவே உலக அளவில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

தற்போது அமெரிக்க நிறுவனங்களுக்குச் சவால் விடும் வகையில், ‘டீப் சீக்’ தனது புதிய ‘V4’ ஏ.ஐ. மாடலை அறிமுகம் செய்துள்ளது. இதில் ‘AI Pro’ மற்றும் ‘Flash’ என இரண்டு மாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இவை சுமார் 10 லட்சம் வார்த்தைகள் வரையிலான தகவல்களைப் புரிந்துகொண்டு, மிகவும் சிக்கலான வேலைகளையும் மிக எளிதாகச் செய்து முடிக்கும் திறன் கொண்டவை என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பப் புரட்சி ஏ.ஐ. சந்தையில் பெரும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.